குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிா்ப்புகூட்டமைப்பினா் முற்றுகை போராட்டம்
By DIN | Published On : 27th February 2020 07:58 AM | Last Updated : 27th February 2020 07:58 AM | அ+அ அ- |

புதுதில்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் சிஏஏ-என்ஆா்சி-என்பிஆா் எதிா்ப்புக் கூட்டமைப்பினா் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இப்போராட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுதில்லியில் நடந்த போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அதை வலியுறுத்தும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.