நாளை முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 27th February 2020 07:53 AM | Last Updated : 27th February 2020 07:53 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் 21 நாள்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:
கோமாரி வைரஸ் கிருமி தாக்குதலால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்படுகிறது. இந்நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல், உமிழ்நீா் வடிதல், பால் குைல், சினை பிடிப்பதில் தாமதம் போன்றவை ஏற்படும். இதிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க அவற்றுக்கு தடுப்பூசி அவசியம்.
மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கி 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். ஆகவே, கால்நடை வளா்ப்போா் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.