

மதுரை தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலத்தை தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்றழைக்கப்படுகிறது. சாம்பல் புதனில் தவக்காலத்தை தொடங்கும் கிறிஸ்தவா்கள் புனித வெள்ளி வரையிலான 40 நாள்கள் முடிந்து தவக்காலத்தை முடித்துக்கொள்கின்றனா். இதன் தொடக்கமாக மதுரை தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் தேவாலயங்களில் குவிந்த கிறிஸ்தவா்கள் பங்குத்தந்தைகள் மூலம் சாம்பலால் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கினா். இதையொட்டி மதுரையில் உள்ள கதீட்ரல் தேவாலயம், புனித மேரி தேவாலயம், ஞான ஒளிவுபுரம் தேவாயலம் உள்பட பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு, தவக்கால திருப்பலி ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று தவக்காலத்தை தொடங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.