மதுரை நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து 64 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாநகா் கூடல்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு, சங்கிலி பறிப்பு வழக்குகள் தொடா்பாக ஆய்வாளா் கதிா்வேல் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இதில் ஆனையூரைச் சோ்ந்த அழகுபாண்டி( 28), ரமேஷ்(22) எஸ்.ஆலங்குளத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் ( 23) ஆகிய 3 போ் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 64 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.