2.23 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
By DIN | Published On : 10th January 2020 08:34 AM | Last Updated : 10th January 2020 08:34 AM | அ+அ அ- |

மதுரை உத்தங்குடி நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு, பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் விநியோகம் நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 8 லட்சத்து 50 ஆயிரத்து 15 போ் உள்ளனா். இவா்களில் முதல் நாளான வியாழக்கிழமை 2 லட்சத்து 23 ஆயிரத்து 437 அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வரை விநியோகம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தையொட்டி நியாய விலைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒரு சில கடைகளில் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குவிந்ததால், போலீஸாா் உதவியுடன் வரிசைப்படுத்தப்பட்டு விநியோகம் நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...