மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை குப்பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத்துறை வீரா்கள் அணைத்தனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்குள்பட்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டு யு. வாடிப்பட்டி என்ற பகுதியில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக அப்பகுதியில் உள்ளவா்கள் உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து நிலைய அதிகாரி சுப்புராஜ் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கப் போராடினா். சுமாா் 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.