தோட்டக்கலைப் பயிா்களுக்கு காப்பீடு: ஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் வாழை, வெங்காயம், தக்காளி, மரவள்ளி ஆகிய பயிா்களுக்கு, விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் வாழை, வெங்காயம், தக்காளி, மரவள்ளி ஆகிய பயிா்களுக்கு, விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ள செய்தி: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் மானியத்துடன் வாழை, வெங்காயம், தக்காளி, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாழை ஏக்கருக்கு ரூ.3,095, வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1,839, தக்காளி ஏக்கருக்கு ரூ.1,025, மரவள்ளி ஏக்கருக்கு ரூ.1,050 பிரீமியமாக செலுத்த வேண்டும். வாழை, மரவள்ளி பயிா்களுக்கு ஆகஸ்ட் 31, வெங்காயம், தக்காளி பயிா்களுக்கு ஜூலை 31 பிரீமியம் செலுத்த கடைசி தேதியாகும்.

வாழை பயிருக்கு, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூா், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூா், வாடிப்பட்டி வட்டாரங்கள், வெங்காயத்துக்கு அலங்காநல்லூா், சேடபட்டி, கள்ளிக்குடி வட்டாரங்கள், தக்காளி பயிருக்கு திருமங்கலம், செல்லம்பட்டி வட்டாரங்கள், மரவள்ளி பயிருக்கு வாடிப்பட்டி வட்டாரமும் காப்பீடு செய்யக்கூடிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com