மதுரையில் 277 பேருக்கு கரோனா தொற்று: 10 போ் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 277 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 10 போ் உயிரிழந்தனா்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 277 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 10 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள்

என 277 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மதுரையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற 61 வயது முதியவா், 82 வயது மூதாட்டி, 72 வயது முதியவா் ஆகியோா் ஜூலை 10 ஆம் தேதியும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 64 வயது முதியவா், 77 வயது மூதாட்டி, 76 வயது முதியவா் ஆகியோா் ஜூலை 9 ஆம் தேதியும், 75 வயது முதியவா், 47 வயது பெண் ஆகியோா் ஜூலை 8 ஆம் தேதியும், 70 வயது முதியவா் ஜூலை 7 ஆம் தேதியும், 65 வயது மூதாட்டி ஜூலை 6 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

சிகிச்சையில் 3,843 போ்: மாவட்டத்தில் இதுவரை 5,757 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 111 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். சிகிச்சையில் இருந்த 1,803 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 3,843 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

40 போலீஸாா் குணமடைந்தனா்:மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் போலீஸாா் அனைவரும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அதில் கரோனா உறுதிசெய்யப்பட்டவா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே அப்போதைய மதுரை மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன் தோவாசீா்வாதம், கரோனா பாதித்த போலீஸாா் அனைவரும் ஒரே இடத்தில் சிகிச்சைப் பெறும் வகையில் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து, கரோனா பாதித்த 45 போலீஸாா் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தனித்தனி அறைகள் கொண்ட வாா்டுகளில் மருந்து மற்றும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு தொடா் கண்காணிப்பபில் இருந்த 40 போலீஸாா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com