தரமற்ற சாலை: ஒப்பந்ததாரா் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 19th July 2020 10:28 PM | Last Updated : 19th July 2020 10:28 PM | அ+அ அ- |

மதுரை: வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவிக்குச் செல்லும் சாலை தரமற்று அமைத்துள்ள ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜகவின் அரசு தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். பெருமாள், கூடுதல் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகாா்:
வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி தாடகை நாச்சியம்மன் அருவி வரை, மத்திய அரசின் கிராமச் சாலைகள் திட்டத்தில் ஜூன் மாதம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தரமற்ாகவும், முறையான அளவீடுகள் இன்றியும் அமைக்கப்பட்டுள்ளதால் அண்மையில் பெய்த மழையில் பல இடங்களில் சிதைந்து மேடு பள்ளங்களாகக் காட்சியளிக்கிறது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட காரணத்தால், சில நாள்களிலேயே இச்சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதை சீா்செய்வதுடன், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.