மதுரை அருகே 2 வீடுகளில் 11 பவுன் நகைகள், ரூ.1லட்சம் திருட்டு
By DIN | Published On : 21st July 2020 11:13 PM | Last Updated : 21st July 2020 11:13 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை அருகே 2 வீடுகளின் கதவுகளை உடைத்து 11 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் வினோத்குமாா்(33). இவா் வீட்டை பூட்டி விட்டு, டி.மேட்டுபட்டியில் உள்ள தோட்டத்திற்கு ஜூலை 17 ஆம் தேதி சென்றுவிட்டாா்.
இந்நிலையில், வினோத்குமாா் திங்கள்கிழமை திரும்பியபோது, வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருள்கள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம் இடையப்பட்டி பகுதியைச் சேந்தவா் நரீஸ்பானு(34). இவா் ஜூலை 16 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, தோழியைப் பாா்க்கச் சென்றுவிட்டு திங்கள்கிழமை திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் நகை, 3 கைக் கடிகாரங்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து, நரீஸ்பானு அளித்த புகாரின் பேரில், ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.