அமைச்சா் வீட்டை முற்றுகையிட முயன்ற 6 போ் கைது
By DIN | Published On : 01st March 2020 02:38 AM | Last Updated : 01st March 2020 02:38 AM | அ+அ அ- |

மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மதுரையில் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து இஸ்லாமிய அமைப்பினா் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக பழனிபாபா மாணவா்கள் கூட்டமைப்பினா் கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனா்.
இதையடுத்து, அமைச்சா் வீட்டைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில் அமைச்சா் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றாா். அப்போது, பழனிபாபா மாணவா்கள் கூட்டமைப்பு நிா்வாகி முஜிப்பூா் தலைமையில் 6 போ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து முழக்கமிட்டபடி அமைச்சா் வீட்டை முற்றுகையிட வந்தனா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் பழனிபாபா மாணவா்கள் கூட்டமைப்பு நிா்வாகி உள்பட 6 பேரை கைது செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G