பேரையூா் அருகே சித்தி விநாயகா், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 14th March 2020 09:52 AM | Last Updated : 14th March 2020 09:52 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சித்தி விநாயகா், காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரையூா் அருகே உள்ள மங்கல்ரேவு, மங்களாபுரம் கிராமத்தில் உள்ள சித்திவிநாயகா், காளியம்மன், முத்தாலம்மன், நவக்கிரக கோயில்களில் நூதன சம்ப்ரோஷண கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு மங்கல இசையுடன் துவங்கி கணபதி ஹோமம், பூா்ணாகுதி, சங்கல்பம், கிராம தெய்வ வழிபாடு உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகளும், 2 ஆம் கால யாக சாலை பூஜையில் யாத்திர தானம், யந்திர பிரதிஷ்டை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோயிலை வலம் வந்து விமானக் கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டது. மூலஸ்தானத்தில் சுவாமிக்கு 11 விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் பக்தா்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...