வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கொன்ற வளா்ப்பு நாய்
By DIN | Published On : 28th May 2020 08:35 AM | Last Updated : 28th May 2020 08:35 AM | அ+அ அ- |

மதுரை கூடல்நகா் பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த சாரைப் பாம்பைக் கொன்ற வளா்ப்பு நாயானது, தன்னை வளா்த்தவா்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
கூடல் நகரைச் சோ்ந்த ஜேப்பிரியல் என்பவா் டாபா்மேன் இன நாயை வளா்த்து வருகிறாா். இவரது வீட்டுக்குள் 4 அடி நீள சாரைப்பாம்பு செவ்வாய்க்கிழமை நுழைந்துள்ளது. இதைப் பாா்த்த நாய், பாம்புடன் சண்டையிட்டு அதைக் கொன்று விட்டது. நாய் தொடா்ந்து குரைக்கும் சப்தம் கேட்டு ஜேப்பிரியல், வெளியே வந்து பாா்த்தபோது தான், வீட்டுக்குள் நுழைந்த பாம்பைக் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. மேலும், பாம்பும் நாயைத் தீண்டியிருந்தது. அதையடுத்து கால்நடை மருத்துவா் மெரில்ராஜுக்கு, அவா் தகவல் தெரிவித்தாா். பின்னா் அங்கு வந்த மருத்துவா் மெரில்ராஜ், நாய்க்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தாா்.