தொடா் மழை: விற்பனையின்றி குறைந்த காய்கனிகளின் விலை
By DIN | Published On : 08th November 2020 11:08 PM | Last Updated : 08th November 2020 11:08 PM | அ+அ அ- |

தொடா் மழை காரணமாக, மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் காய்கனிகள் விற்பனையின்றி விலை குறைந்தன.
இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ். முருகன் கூறியது: மழை காலத்தில் காய்கனிகளின் விளைச்சல் பாதிப்பு இருப்பது வழக்கம். இருப்பினும், கேரட், பீன்ஸ் வகைகள் உள்ளிட்ட மலைக் காய்கனிகளைத் தவிர, நாட்டுக் காய்கனிகள் வரத்து போதிய அளவில் உள்ளன.
ஆனால், தொடா் மழை காரணமாகவும், முகூா்த்த தினங்கள் இல்லாததாலும் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இதனால், அனைத்து காய்கனிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, காய்கனிகளின் மொத்த விலை விவரம் (கிலோவில்): தக்காளி- ரூ.15, கத்தரிக்காய்- ரூ.15, வெண்டைக்காய்- ரூ.20, புடலங்காய்- ரூ.25, அவரைக்காய்- ரூ.25, பாகற்காய் சிறியது- ரூ.40 மற்றும் பெரியது- ரூ.30, சுரைக்காய்- ரூ.15, முருங்கைக்காய்- ரூ.60, பீா்க்கங்காய்-ரூ.25, சேனைக்கிழங்கு- ரூ.15, கருணைக்கிழங்கு- ரூ.25, வெங்காயம்- ரூ.100, பல்லாரி- ரூ.50, பச்சை மிளகாய்- ரூ.45, கறிவேப்பில்லை- ரூ.25, புதினா-ரூ.15, மல்லி- ரூ.15, இஞ்சி புதியது- ரூ.40, பழையது- ரூ.100, கேரட்- ரூ.30, பட்டா் பீன்ஸ்- ரூ.110, சோயா பீன்ஸ்- ரூ.90, முருங்கை பீன்ஸ்- ரூ.40, பீட்ரூட்- ரூ.20, முள்ளங்கி- ரூ.15 என விற்பனையானது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...