பாம்பன் புதிய ரயில் பால கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

பாம்பன் கடல் மீது நடைபெற்று வந்த புதிய ரயில் பால கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பாம்பன் கடல் மீது நடைபெற்று வந்த புதிய ரயில் பால கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் சவாலான பணியை, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் செய்து வருகிறது. தற்போது, கடலில் நிலவும் மோசமான சீதோஷ்ண நிலை காரணமாக, நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய பாலத்துக்கான தூண்களுக்கு குழி தோண்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாலம் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில மிதவைகள் கடற்கரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

பளுதூக்கும் இயந்திரம் உள்ள மிதவைகள் கடல் கொந்தளிப்பை தாங்கும் வகையில், நான்கு முனைகளிலும் உறுதியாகப் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு பளுதூக்கும் இயந்திரம் உள்ள மிதவையில் தண்ணீா் நிரப்பப்பட்டு, பாதுகாப்புக்காக கடலுக்குள் முழ்கடிக்கப்பட்டுள்ளது.

நன்றாக நங்கூரம் இடப்பட்டுள்ள மிதவைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. கடலில் சீதோஷ்ண நிலை ஒத்துழைக்கும்போது பளுதூக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள மிதவைகள் கரைக்கு அனுப்பப்படும். குழிதோண்டும் இயந்திரங்கள் கடலில் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய பாலம் கட்டுமானப் பணியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com