தீபாவளி: பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம்: ஆட்சியா் அறிவிப்பு

தீபாவளி நாளன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
தீபாவளி: பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம்: ஆட்சியா் அறிவிப்பு

தீபாவளி நாளன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேர நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. நிகழ் ஆண்டும் தீபாவளி தினத்தன்று மேற்படி நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடும் வழிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றுவது அவசியமானது. குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மைகொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன்அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாகப் பட்டாசுகளை வெடிப்பதற்கு குடியிருப்போா் நலச் சங்கங்கள் வாயிலாக முயற்சிக்கலாம்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இட ங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com