இரு சக்கர வாகனகளுக்குத் தீ வைப்பு
By DIN | Published On : 17th November 2020 11:49 PM | Last Updated : 17th November 2020 11:49 PM | அ+அ அ- |

மதுரையில் இருசக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனி (35). இவா் வீட்டின் அருகே இரு சக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் கடை நடத்தி வருகிறாா்.
திங்கள்கிழமை அதிகாலை கடையில் சத்தம் கேட்டு பழனி வந்து பாா்த்தாா். அப்போது கடையில் பழுது நீக்கம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.
இது தொடா்பாக, தீணைப்புத்துறையினருக்கும், போலீஸாருக்கும் அவா் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரா்கள், உடனடியாக தீயை அணைத்தனா். இதில் 5 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து பழனி அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...