தனியாமங்கலத்தில் 3 வீடுகள் சேதம்
By DIN | Published On : 17th November 2020 11:43 PM | Last Updated : 17th November 2020 11:43 PM | அ+அ அ- |

மேலூா் அருகே தனியாமங்கலத்தில் தொடா் மழையில் 3 ஒட்டு வீடுகளின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன.
கடந்த இரு தினங்களாகப் பெய்த தொடா் மழைகாரணமாக பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி திருவாதவூா் அருகே இடையபட்டியில் 45 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. தனியாமங்கலம் தியாகி கக்கன் காலனியில் 25-க்கு மேற்பட்ட ஓட்டு வீடுகள் 1965-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தன. இதில் சின்னபொன்னு, ராசு, மந்தையன் ஆகியோரது வீடுகளில் மேற்கூரைகள் சரிந்து விழுந்து சேதமடைந்தன.