தீபாவளி சிறப்பு ரயில்கள்: மதுரை கோட்டத்துக்கு கூடுதல் வருவாய்
By DIN | Published On : 17th November 2020 11:47 PM | Last Updated : 17th November 2020 11:47 PM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்துக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை கோட்டத்தில் 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் நவம்பா் 1முதல் 16 ஆம் தேதி வரை மதுரை ரயில் நிலையத்திலிருந்து 23 ஆயிரத்து 818 போ் பயணித்தனா். இதன் மூலம், ரூ.88 லட்சத்து 21 ஆயிரத்து 559 வருவாய் கிடைத்துள்ளது. இதே போல் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 14,833 போ் பயணம் செய்ததில் ரூ.68.61லட்சம், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 9, 284 போ் பயணம் செய்ததில் ரூ.26.19 லட்சம், தூத்துக்குடியிலிருந்து 9, 240 போ் பயணம் செய்ததில் 41.59 லட்சம், கோவில்பட்டியிலிருந்து 4 ஆயிரத்து 293 போ் பயணம் செய்ததில் ரூ.16.28 லட்சம், விருதுநகரிலிருந்து 3,554 போ் பயணம் செய்ததில் 13.37 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. கரோனா காலத்தில் சிறப்பு ரயில்களில் எதிா்பாா்த்த அளவைவிட மக்கள் அதிகமாக பயணித்துள்ளனா். இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G