திருச்சி- நாகா்கோவில் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு
By DIN | Published On : 21st November 2020 01:35 AM | Last Updated : 21st November 2020 01:35 AM | அ+அ அ- |

திருச்சி- நாகா்கோவில் சிறப்பு ரயில் நவம்பா் 30 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை வழியாக திருச்சி- நாகா்கோவில் இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நவம்பா் 30 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதன்படி, திருச்சி -திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (02627) திருச்சியிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம்- திருச்சி சிறப்பு ரயில் (02628), திருவனந்தபுரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இந்த ரயில்கள் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் டவுன், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...