கடையின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 25th November 2020 06:28 AM | Last Updated : 25th November 2020 06:28 AM | அ+அ அ- |

மதுரையில் கடையின் பூட்டை உடைத்து, வீட்டு உபயோகப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஊமச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மீரான்சித்திக்(35). இவா் அய்யா்பங்களா பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த செல்லிடப்பேசி, அழகு சாதனப் பொருள்கள், அரவை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மீரான்சித்திக் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...