சுற்றுச்சாலையில் விபத்து: இருவா் பலி
By DIN | Published On : 25th November 2020 06:25 AM | Last Updated : 25th November 2020 06:25 AM | அ+அ அ- |

மதுரை சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருவா் உயிரிழந்தனா்.
மதுரை விரகனூா் வைகை காலனியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(34). இவா் தனது உறவினா் நாகராஜன் (51) என்பவருடன் மதுரை சுற்றுச் சாலையில் சிவகங்கை விலக்கு சாலை சோதனைச் சாவடி பகுதியில் சென்றாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...