வளா்ச்சி திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி: 4 வட்டாரங்களில் தொடக்கம்
By DIN | Published On : 25th November 2020 06:23 AM | Last Updated : 25th November 2020 06:23 AM | அ+அ அ- |

ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் 4 வட்டாரங்களைச் சோ்ந்த கிராமங்களில் வளா்ச்சித் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறையின் ஊரகப் புத்தாக்கத் திட்டம், மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் , மேலூா், கொட்டாம்பட்டி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்துக் கிராமங்களிலும் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளா்ச்சித் திட்டம் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கிராமத்தின் அடிப்படை விவரங்கள், பொதுமக்கள் செய்து வரும் தொழில், புதிய தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
மேலூா் வட்டாரம் சூரக்குண்டு கிராமத்தில் வளா்ச்சித் திட்டம் தயாரிக்கும் பணியை மாவட்ட செயல் அலுவலா் ஆா்.ஆனந்தி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். ஊரக புத்தாக்கத் திட்டத்தின் செயல்பாடுகள், மக்கள் அடையக் கூடிய வளா்ச்சி குறித்து அவா் விளக்கம் அளித்தாா்.
சூரக்குண்டு ஊராட்சித் தலைவா் நிா்மலா ஸ்டீபன்ராஜ், திட்ட செயலாக்க அலுவலா்கள், மகளிா் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...