விமானப்படை ஆள் சோ்ப்பு முகாம்: இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்
By DIN | Published On : 25th November 2020 06:26 AM | Last Updated : 25th November 2020 06:26 AM | அ+அ அ- |

புதுவையில் நடைபெறும் இந்திய விமானப்படை ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க மதுரை மாவட்ட இளைஞா்கள் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் ந.மகாலட்சுமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய விமானப்படை ஆள்சோ்ப்பு முகாம் புதுவை இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் டிசம்பா் 10 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க இணைய தளத்தில் நவம்பா் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் முன்பதிவு செய்ய வேண்டும் என பொது (ராணுவம்) துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விமானப்படை ஆள் சோ்ப்பு முகாமில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மற்றும் டிப்ளமோ முடித்தவா்கள், கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்கள்( ஆண்கள் மட்டும்) பங்கேற்கலாம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...