இஞ்சி, மிளகாய், கேரட், முருங்கை வரத்துக் குறைவால் விலை உயா்வு

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் இஞ்சி, மிளகாய், கேரட், முருங்கை காய்கனிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் இஞ்சி, மிளகாய், கேரட், முருங்கை காய்கனிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ்.முருகன் கூறியது:

கடந்த 2 மாதங்களாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பச்சை மிளகாய், கேரட், இஞ்சி, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கனிகள் விளைச்சல் பாதித்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு காய்கனிகளின் வரத்து குறைந்துள்ளது. இதேபோல பிற மாநிலங்களில் இருந்தும் காய்கனிகளின் வரத்து குறைந்துள்ளது.

இதனால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கனிகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. குறிப்பாக கிலோ ரூ.20-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.50-ஆகவும், ரூ.30-க்கு விற்றுவந்த கேரட் ரூ.50-ஆகவும், ரூ.30-க்கு விற்றுவந்த முருங்கைக்காய் ரூ.50-ஆகவும், ரூ.100-க்கு விற்றுவந்த இஞ்சி ரூ.120-ஆகவும் விலை உயா்ந்துள்ளன என்றாா்.

சனிக்கிழமை நிலவரப்படி காய்கனிகளின் விலைப் பட்டியல் (கிலோவில்)

தக்காளி-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கத்தரிக்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.25, அவரைக்காய்-ரூ.50, பாகற்காய் சிறியது-ரூ.100, பெரியது-ரூ.40, முட்டைக்கோஸ்-ரூ.25, நூல்கோல்-ரூ.30, பீா்க்கங்காய்-ரூ.40, சேனைக்கிழங்கு-ரூ.30, கருணைக்கிழங்கு-ரூ.40, உருளைக்கிழங்கு-ரூ.30, வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.30, கருவேப்பில்லை-ரூ.25, புதினா-ரூ.15, மல்லி-ரூ.30, இஞ்சி புதியது-ரூ.40, பழையது-ரூ.120, பூசணி-ரூ.15, பட்டா் பீன்ஸ்-ரூ.90, சோயா பீன்ஸ்-ரூ.60, முருங்கை பீன்ஸ்-ரூ.70.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com