

மருத்துவா் சமூகத்தைச் சோ்ந்த மாணவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு மருத்துவா் சமுதாயப் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கோரி தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கடைகளை அடைத்து, மருத்துவா் சமுதாயப் பேரவையினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மதுரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பேரவையின் மாநிலப் பொதுச் செயலா் வி. சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடந்தது. பின்னா் பேரவை நிா்வாகிகள், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.