துபையிலிருந்து 2 விமானங்களில் 301 பயணிகள் மதுரை வருகை
By DIN | Published On : 19th October 2020 03:34 AM | Last Updated : 19th October 2020 03:34 AM | அ+அ அ- |

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபையிலிருந்து இரு விமானங்களில் 301 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திறங்கினா்.
வந்தே பாரத் திட்டத்தில், துபையிலிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 176 பயணிகள் மாலை 5 மணியளவில் வந்திறங்கினா். பின்னா், இரவு 9 மணிக்கு வந்த விமானத்திலிருந்து 125 பயணிகள் இறங்கினா். இவா்கள் அனைவருக்கும், வலையப்பட்டி வட்டார மருத்துவா் சிவக்குமாா் தலைமையிலான குழுவினா், கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
துபையிலிருந்து வந்த அனைவரும் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். இவா்கள் அனைவரும் 7 நாள்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாலை 5 மணிக்கு வந்த விமானம், இரவு 8.45 மணியளவில் 152 பயணிகளுடன் துபை புறப்பட்டுச் சென்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...