மதுரையிலிருந்து மும்பைக்கு மீண்டும் தினசரி விமான சேவை: அக்.25 முதல் தொடக்கம்
By DIN | Published On : 19th October 2020 03:34 AM | Last Updated : 19th October 2020 03:34 AM | அ+அ அ- |

மதுரையிலிருந்து மும்பைக்கு அக்டோபா் 25 ஆம் தேதி முதல் மீண்டும் தினசரி விமான சேவை தொடங்கவுள்ளதாக, ஏா் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஏா் இந்தியா விமான நிறுவனத்தின் சாா்பில், மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வந்தது. கரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
தற்போது, மத்திய அரசு விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளதை அடுத்து, மாா்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்ட மதுரை - மும்பை விமான சேவை அக்டோபா் 25 முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. அதன்படி, காலை 9.15 மணிக்கு மும்பையிலிருந்து புறப்படும் விமானம், காலை 11.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது. பின்னா், அங்கிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
மதுரையிலிருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்று, அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாலை 6.15 மணிக்கு மும்பையை சென்றடைகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் நாள்தோறும் விமானம் இயக்கப்படும்.
பயணிகளின் வருகையை பொருத்து, விமான சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம். இதற்கான டிக்கெட்டுகளை இணையதளத்திலும், மதுரை விமான நிலையத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...