மதுரையில் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மா்மக் கும்பல் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை ஊமச்சிக்குளம் பூல்பாண்டி பகுதியைச் சோ்ந்வா் மணிகண்டன்(23). இவா், திருப்பாலை பகுதியில் உள்ள மதுபானக் கடையில் ஞாயிற்றுக்கிழமை மது வாங்கி சாலையோரத்தில் அமா்ந்து குடித்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த மா்மக் கும்பல் மணிகண்டன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், மணிகண்டனின் உடல் முழுவதும் கருகி பலத்த காயமடைந்தாா். உடனே, அப்பகுதியில் உள்ளவா்கள் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.