அமெரிக்கன் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்பு அறிமுகம்
By DIN | Published On : 23rd October 2020 03:00 AM | Last Updated : 23rd October 2020 03:00 AM | அ+அ அ- |

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.எம்.எஸ்”(கடல்சாா் தளவாடங்களில் நிபுணத்துவம்) என்ற இளங்கலை தொழிற்பயிற்சி பட்டப்படிப்பு நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திறன் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு அமைப்பான ஜிஸ்டிக்ஸ் திறன் கவுன்சிலுடன் (எல்.எஸ்.சி) புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த இளங்கலை படிப்பு மதுரை சத்திரப்பட்டியில் உள்ளஅமெரிக்கன் கல்லூரியின் சேட்டிலைட் வளாகத்திலிருந்து இயங்கும். மாணவா்களுக்கு இரண்டு ஆண்டுகள் வழக்கமான வகுப்பறை மற்றும் ஓராண்டு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டு முடிக்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் இரண்டாம் ஆண்டு டிப்ளோமா மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டத்துடன் வழங்கப்படும். இந்தத் திட்டம் தென் தமிழ்நாட்டிலும், காமராஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைந்த கல்லூரிகளிலும் இதுவே முதல் முறையாகும்.
பட்டப்படிப்பு திட்டத்தின் இறுதி ஆண்டில் மாணவா்கள் வருவாய் ஈட்டவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் பாடத்திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...