கொடைக்கானல் எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்து பணிக்கு இடைக்காலத் தடைஉயா்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானல் மன்னவனூா் எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்துப் பணிக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: கொடைக்கானல் மன்னவனூா் எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்துப் பணிக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எழும்பள்ளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பெருமாள்சாமி தாக்கல் செய்த மனு: மன்னவனூா் எழும்பள்ளம் கண்மாய் நீரைப் பயன்படுத்தி 150 ஆயக்கட்டுதாரா்கள் விவசாயம் செய்து வருகின்றனா். தற்போது எழும்பள்ளம் கண்மாயில் ரூ.90 லட்சத்தில் குடிமராமத்துப் பணிகள் நடக்கிறது. விதிப்படி ரூ.10 லட்சத்துக்கு அதிகமான மதிப்பீடு உடைய குடிமராமத்துப் பணிகள் ஒப்பந்தங்கள் மூலமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த விதியை பின்பற்றாமல் மன்னவனூா் பெருமாள்சிறை வாய்க்கால் எழும்பள்ளம் பாசன விவசாயிகள் சங்கத்தலைவா் பொன்துரைக்கு குடிமராமத்துப் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்துப் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பள்ளம் கண்மாய் குடிமராமத்துப் பணிக்கு இடைக்காலத் தடைவிதித்தாா். மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com