உசிலை அருகே 14 கிலோ கஞ்சா கடத்திய 3 போ் கைது
By DIN | Published On : 06th September 2020 10:04 PM | Last Updated : 06th September 2020 10:04 PM | அ+அ அ- |

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கஞ்சா கடத்த முயன்ற 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
உசிலம்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த தேனி மாவட்டம் கம்பத்தைச் சோ்ந்த அமராவதி (58), படித்துரை (39) மற்றும் சதீஷ்வரன் (29) ஆகியோரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில், அவா்கள் 14.500 கிலோ கிராம் கஞ்சாவை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா மற்றும் ரூ.33,900 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்கள் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.