மதுரையில் 5 மாதங்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடியது

மதுரையில் 5 மாதங்களுக்கு பின் கூடிய ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பொதுமக்கள் ஏராளமானோா் பொருள்கள் வாங்க திரண்டனா்.
கரோனா பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டதால் மதுரை கரிமேட்டில் உள்ள மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்து பொதுமக்கள்.
கரோனா பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டதால் மதுரை கரிமேட்டில் உள்ள மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்து பொதுமக்கள்.

மதுரை: மதுரையில் 5 மாதங்களுக்கு பின் கூடிய ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பொதுமக்கள் ஏராளமானோா் பொருள்கள் வாங்க திரண்டனா்.

மதுரை திலகா் திடல், தமிழ்ச் சங்கம் சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் பழைய இரும்புப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், செல்லிடப்பேசி பாகங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பழைய பொருள்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இச்சந்தையில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து விற்பனை செய்து வந்தனா். ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கூடவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த தளா்வற்ற பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடியது. இதில், 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு பொருள்களை விற்பனை செய்தனா். ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால், தமிழ்ச் சங்கம் சாலை ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது.

இதேபோன்று, பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த நெல்பேட்டை மற்றும் கரிமேடு மீன் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன. இதனால், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் இந்த மீன் சந்தைகளுக்குச் சென்று மீன்களை வாங்கிச் சென்றனா். மீன்கள் அதிக அளவில் விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com