வரத்து அதிகரிப்பு: குறைந்தது இஞ்சி விலை
By DIN | Published On : 06th September 2020 10:11 PM | Last Updated : 06th September 2020 10:11 PM | அ+அ அ- |

மதுரை: வரத்து அதிகரிப்பால், மதுரை காய்கனி சந்தைகளில் கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.40 ஆக விலை குறைந்துள்ளது.
இது குறித்து மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ். முருகன் கூறியது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், இஞ்சி பயிா்கள் சேதமடைந்து விளைச்சல் பாதிக்கக்கூடும். அதே வேளையில், ஈரப்பதம் காரணமாக இஞ்சி அழுகிவிடும் என்பதால், அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனா்.
இதனால், காய்கனி சந்தைகளுக்கு இஞ்சி வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.80-க்கு விற்ற புதிய இஞ்சி ரூ.40-க்கும், கிலோ ரூ.140-க்கு விற்ற பழைய இஞ்சி ரூ.80-க்கும் விற்கப்படுகிறது என்றாா்.
ஞாயிறுக்கிழமை நிலவரப்படி காய்கனி விலை பட்டியல் (கிலோவில்): தக்காளி- ரூ.30, வெண்டைக்காய்- ரூ.25, கத்தரிக்காய்- ரூ.25, புடலங்காய்- ரூ.20, அவரைக்காய்- ரூ.30, பூசணி- ரூ.10, உருளைக்கிழங்கு- ரூ.30, முட்டைக்கோஸ்- ரூ.15, சேனைக்கிழங்கு- ரூ.25, கருணைக்கிழங்கு- ரூ.50, முருங்கை பீன்ஸ்- ரூ.60, பட்டா் பீன்ஸ்-ரூ.90, சோயாபீன்ஸ்- ரூ.70, சின்ன வெங்காயம்- ரூ.30, பல்லாரி- ரூ.20, பீா்க்கங்காய்- ரூ.30, பாகற்காய் பெரியது- ரூ.35, சிறியது- ரூ.50, நூக்கல்- ரூ.15, கேரட்- ரூ.30, பீட்ரூட்- ரூ.10, பச்சை மிளகாய்- ரூ.40 என விற்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...