உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 11th September 2020 07:23 AM | Last Updated : 11th September 2020 07:23 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் 945 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவீந்திரநாத் குமாா், மாவட்ட ஆட்சியா் வினய் ஆகியோா் கலந்து கொண்டு, சமூக பாதுகாப்புத் திட்டம், நத்தம் வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட ரூ. 2. 26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மேலும் நலிவுற்ற தொழிற்சங்க உறுப்பினா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பா.நீதிபதி, மாணிக்கம் (சோழவந்தான்), நகரச் செயலாளா் பூமா ராஜா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் செல்வராஜ், மக்கள் தொடா்பு அலுவலா் தங்கவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அய்யப்பன், சுதாகரன், ஒன்றியச் செயலாளா்கள் செல்லம்பட்டி ராஜா, சேடபட்டி பிச்சை ராஜன், மருத்துவா் அணி ஒ.சந்திரன், மாணவா் அணி மகேந்திரபாண்டி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.