காமராஜா் பல்கலை.யில் இயன்முறை மருத்துவ முகாம்
By DIN | Published On : 11th September 2020 07:21 AM | Last Updated : 11th September 2020 07:21 AM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இலவச இயன்முறை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காமராஜா் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழக தொழில்முனைவோா் கல்வி மையத்தின் சாா்பில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமை துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். பல்கலைக்கழக பதிவாளா் வி.எஸ்.வசந்தா (பொறுப்பு) தொழில்முனைவோா் கல்வி மையத்தின் துறைத்தலைவா் கே.ரவிச்சந்திரன், முதுநிலை நரம்பியல் இயன்முறை மருத்துவா் குருமுருகன், பல்கலைக்கழக மருத்துவமனை அலுவலா் கிளாசன் சாலமன் மற்றும் மருத்துவா்கள் பங்கேற்றனா். முகாமில் பல்கலைக்கழக ஊழியா்கள், பேராசிரியா்கள், அலுவலா்களுக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.