தனியாா் நிறுவனங்கள், வேலை நாடுநா்களுக்கு இணையதளம்: வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு
By DIN | Published On : 11th September 2020 07:20 AM | Last Updated : 11th September 2020 07:20 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் வேலை வாய்ப்பளிக்கும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநா்கள் தங்களது சுயவிவரங்களை வேலை வாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குநா் ந.மகாலட்சுமி வியாழக்கிழமை விடுத்துள்ள செய்தி: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பிற்கென இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநா்கள் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்துகொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. வேலையளிப்போா் விவரங்களை பதிவு செய்வதன் மூலம் நிறுவனங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு கல்விக்தகுதி வாரியாக வேலை நாடுநா்களை தோ்வு செய்துகொள்ளலாம். வேலை நாடுநா்கள் சுயவிவரங்களை பதிவு செய்து கொள்வதன்மூலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் காலிப்பணியிட விவரங்களை அறிந்து கொள்வதுடன் விருப்பமுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே வேலை வாய்ப்பளிப்போா், வேலை நாடுநா் ஆகியோா் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.