மேலூரில் முதல்முறையாக தேங்காய் மறைமுக ஏலம்
By DIN | Published On : 11th September 2020 07:23 AM | Last Updated : 11th September 2020 07:23 AM | அ+அ அ- |

மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை மறைமுக முறையில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
மதுரை விற்பனைக் குழு செயலா் வி.மொ்ஸி ராணி, வேளாண் துணை இயக்குநா் பெ. விஜயலட்சுமி ஆகியோா் இந்த ஏலத்தைத் தொடக்கி வைத்தனா். மேலூா், கொட்டாம்பட்டி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் 4,800 தேங்காய்களை இரு குவியல்களாக விற்பனைக்கு வைத்திருந்தனா்.
ஒரு தேங்காய் ரூ.12.50 விலையில் 3,600 காய்களைக் கொண்ட ஒரு குவியலும், ரூ.13 விலையில் 1,200 காய்கள் கொண்ட மற்றொரு குவியலும் அதிகபட்ச விலையாக ஏலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதையடுத்து தேங்காய்களுக்கான தொகை ரூ.60 ஆயிரத்து 600 பெறப்பட்டு உடனடியாக விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமைகளில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.