தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செல்லம்பட்டியில் மரம் வளர்ப்பு ஆலோசனைக் கூட்டம்

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

News image

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்.

Updated On :2 ஆகஸ்ட் 2021, 8:35 am

DIN

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், கரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கரோனா விழிப்புணர்வு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் செல்லம்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கை கழுவும் முறை குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் அணில் சேகர் பார்வையிட்டார். மேலும் அரசுப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார். 

கரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் போடுவார்பட்டி ஊராட்சி வி.காமாட்சிபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கை கழுவும் முறை குறித்த  செயல்முறை விளக்கம் நடைபெற்றது. 

கரோனா விழிப்புணர்வு உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.

இவ்விழாவில் உசிலம்பட்டி பி. அய்யப்பன் எம்.எல்.ஏ செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கீதா, ராஜா, அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன், மாவட்ட இலக்கிய அணி போத்திராஜ் மாவட்ட மாணவர் அணி மகேந்திர பாண்டி மாவட்ட ஊராட்சிகள் துணைத்தலைவர் முத்துராமன் வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினர் ஐயப்பன் வைகை அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.