தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மதுரை மாவட்டத்தில் தினமும் 2.16 லட்சம் மகளிர் இலவசப் பயணம்  

இலவச பேருந்து பயண திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் தினமும் 2.16 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

News image

செய்தியாளர்களை சந்திக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர்.

Updated On :16 ஆகஸ்ட் 2021, 8:18 am

DIN

இலவசப் பேருந்து பயண திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் தினமும் 2.16 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

திமுக அரசு பொறுப்பேற்று 100 நாள்கள் முடிவடைந்த நிலையில் அரசின் 100 நாள் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில்ல 4,412 மனுக்கள் பெறப்பட்டன. இதில்1,809 மனுக்கள் தீர்வு காணப்பட்டு உள்ளன. இதனடிப்படையில் 91 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா 141 பேருக்கு முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு கோரிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களில் தகுதியுள்ள 821 பேருக்கு திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகளிருக்கு இலவசப் பேருந்து பயண திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.16 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். கரோனா பாதிப்பில் தாய் தந்தை இருவரையும் இழந்த ஐந்து குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை பெறப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 174 குழந்தைகளுக்கு அரசின் உதவித் தொகைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

கரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள தேவையான உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தில் 8 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு நாளைக்கு 8 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதேபோல நாளொன்றுக்கு 16,000 கரோனா பரிசோதனைகள் செய்வதற்கான ஆர்டிபிசிஆல் கருவி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர். 

மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 87 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இது 18 வயதுக்கு மேற்பட்டோரில் 30 சதவீதம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.