மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அஷ்டமி சப்பரம் வீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அஷ்டமி சப்பரம் வீதியுலா நடைபெற்றது. 
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அஷ்டமி சப்பரம் வீதியுலா.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அஷ்டமி சப்பரம் வீதியுலா.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அஷ்டமி சப்பரம் வீதியுலா நடைபெற்றது. 

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை எடுத்துரைக்கும் வகையில் அஷ்டமி சப்பர திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் சப்பரங்களில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து சப்பரங்களில் வீதி உலாவாக சென்றன.

சப்பரங்கள் கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தன. சப்பரங்களை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து செல்வது தனிச்சிறப்பாகும்.  தேர் வீதிகளில் உலாவரும் போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசி வீதிகளில் தூவப்பட்டது.

பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. தேரோட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிவீதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை போல   அஷ்டமி சப்பர தேரோட்டமும் மிகவும் பிரசிதிபெற்றது என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்றபடி சிவசிவ என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com