

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் சாலை பாதுகாப்பு மாத விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் போலீஸாா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். இந்த பேரணி டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம், திருமங்கலம் சாலை, பேரையூா் சாலை வழியாகச் சென்றது. அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த பேரணியில் பேரையூா் காவல் ஆய்வாளா் நிா்மலா, ஆய்வாளா் துரைபாண்டி, சாா்பு- ஆய்வாளா் முகமது நூா்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.