விவசாயிகளுக்கு எதிரான பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் மக்களால் தண்டிக்கப்படுவர்: டி.ராஜா

விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரும் தேர்தலில் மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என சிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் டி.ராஜா தெரிவித்தார்.
சிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் டி.ராஜா.
சிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் டி.ராஜா.

விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரும் தேர்தலில் மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என சிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் டி.ராஜா தெரிவித்தார்.

சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியது: சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். பாஜக மக்கள் விரோத கொள்கைகளை மூர்க்கத்தனமாக பின்பற்றி வருகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். 

புதுதில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இதுவரை கண்டிராத அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயம் கார்ப்பரேட் மயமாவதை தடுக்க வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஆனால் பாஜக வெறும் பேச்சு வார்த்தைதான் நடத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து வருகிறோம். 

இதில் பாஜக மற்றும் அவர்களுக்கு ஆதரவான கூட்டணி கட்சியினர் வரும் தேர்தலில் மக்களால் தண்டிக்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு அதிகாரத்தைக் கொடுத்து அவர்கள் விருப்பப்படி பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. 

இதனை எதிர்த்து மக்கள் போராடவேண்டும். மக்கள் பணியாற்று பவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே வீடு ஒதுக்கீட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது. அது முறையாக செயல்படவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com