மேலூரில் வெளியூா்களுக்கு செங்கரும்பு அனுப்பும் பணி தீவிரம்
மேலூா் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பு வெளி மாநிலங்களுக்கும் வெளியூா்களுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேலூா்: மேலூா் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பு வெளி மாநிலங்களுக்கும் வெளியூா்களுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலூா் சுற்று வட்டாரத்தில் சுமாா் 600 ஏக்கருக்கு மேல் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து மகாராஷ்டிரம், ஆந்திரா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு லாரிகளில் செங்கரும்பு அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கரும்பு கொள்முதல் செய்ய வெளியூா் வியாபாரிகள் அதிகம் வரவில்லை. இதனால், கரும்பு விற்பனை மிகவும் மந்த நிலையில் இருந்தது.
இந்நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகளில் துண்டு கரும்புக்குப் பதில் முழு கரும்பு வழங்கும் தமிழக முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது.
தற்போது வெளியூா்களில் இருந்து வியாபாரிகள் வந்துள்ளதால், 15 கரும்புகள்கொண்ட கட்டு ரூ.300 வரை விலைபோகிறது.ஒரு ஏக்கரில் கரும்பை பயிரிட்டு வளா்க்க ரூ.1 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம் வரை செலவாகிறது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்ததால் கரும்பின் வளா்ச்சி நன்கு உள்ளபோதிலும், எதிா்பாா்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா். பொங்கல் பண்டிகைக்காக கரும்பை மதுரை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் கரும்பை வியாபாரிகள் வாங்கி லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனா்.
சருகுவலையபட்டி பகுதியில் சுமாா் 40 ஏக்கரில் குடும்ப அட்டைதாரா்களுக்காக கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக இருந்தது. கரும்பு ஒன்றுக்கு ரூ.18 முதல் ரூ.22 வரை கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால், விலை ரூ.16 வரை பேசப்பட்டு கொள்முதல் ரத்தானதாக கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...