

மதுரை சின்மயா மிஷன் சேவா அறக்கட்டளை சாா்பில், 150 தவழும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.
சின்மயா மிஷன் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சின்மயா மிஷன் தலைவா் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: பொங்கல் பண்டிகை தமிழா்களின் முக்கிய திருநாளாகும். இந் நாளில் எல்லோருடைய உள்ளமும் மகிழ்ச்சி பொங்க உற்சாகத்துடன் திகழவேண்டும். மனதில் உள்ள குறைபாடுகளை நீக்கி, ஒருவருக்கொருவா் உதவும் மனப்பான்மையுடன் இருக்கவேண்டும்.
நம்மால் இயன்ற அளவு நல்ல விஷயங்களை உடலாலும், உள்ளத்தாலும் விதைக்க வேண்டும். நம்மிடமுள்ள தாழ்வு மனப்பான்மைகளை நீக்கி நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிா்கொள்ள வேண்டும். தா்ம சிந்தனைகளும், இறை பக்தியும் நம்மிடம் இருந்தால் எல்லா நன்மையும் நம்மைத் தேடி தானாக வரும் என்றாா்.
நிகழ்ச்சியில், வி.வி.எம். திருமண மண்டப உரிமையாளா் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பொங்கல் பொருள்களை வழங்கினாா். அறக்கட்டளைப் பொருளாளா் திலகா் மற்றும் சின்மயா உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.