பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் அருகே உள்ளது ராவுத்தன்பட்டியை ராஜாராம் (65).இவா் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் ஊருணி பக்கம் நடந்து சென்ற ராஜாராமை, அதே ஊரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(41) என்பவா் வழிமறித்து நீதானே ஊராட்சி மன்றத் தோ்தலில் என்னை தோற்கடித்தாய் என்று கூறி தகராறு செய்துள்ளாா். மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமகிருஷ்ணனை வெட்டியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த ராஜாராம் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதேபோல் மகாலிங்கம் என்பவரையும் , ராமகிருஷ்ணன் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த மகாலிங்கம் பேரையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் பேரையூா் காவல் நிலைய போலீஸாா் ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு, அவரைக் செய்து கைது செய்தனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.