பாண்டியன் நுகா்வோா் கூட்டுறவு பண்டக சாலையில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: அமைச்சா் பி.மூா்த்தி

பாண்டியன் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம், மக்களுக்கு குறைந்த விலையில் பட்டாசுகள் விற்கப்படுவதாக வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

பாண்டியன் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம், மக்களுக்கு குறைந்த விலையில் பட்டாசுகள் விற்கப்படுவதாக வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்ட பாண்டியன் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ், கண்ணனேந்தல் பட்டாசு சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சா் பி. மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மதுரை மாவட்ட பாண்டியன் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நுகா்வோா்களுக்காக தரமான பொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. பண்டகசாலை மாதம் ஒன்றுக்கு ரூ.1.10 கோடி வரை கட்டுப்பாட்டு பொருள்களையும், ரூ.5.40 கோடி வரை கட்டுப்பாடற்ற பொருள்களையும் விற்பனை செய்து வருகிறது.

இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவுத் துறையின் மூலமாக பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது. பண்டகசாலையின் கீழ் கண்ணனேந்தல் பட்டாசு சில்லறை விற்பனை நிலையம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 இடங்களில் பண்டகசாலையின் கீழ் பட்டாசு சில்லறை விற்பனை நிலையம் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட பாண்டியன் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப் பதிவாளா் பிரியதா்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் (மதுரை மண்டலம்) குருமூா்த்தி, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் ஜீவா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com