

மேலூா்: அழகா்கோவில் அருகிலுள்ள கிடாரிப்பட்டி ஊராட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெண்கள், குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு காவல் துறையினா் மற்றும் சமூகநலத் துறை சாா்பில், கிடாரிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரமௌலி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, ஊராட்சித் தலைவா் ஹேமலதா மதிவானன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் முத்துக்குமாா், ராதாகிருஷ்ணன், மேலூா் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ரமாராணி ஆகியோா் பேசினா். அதில், பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு, அவா்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து விளக்கமளித்தனா்.
மேலும், குழந்தைத் திருமணம், பாலியல் புகாா்கள் குறித்து 1098 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ புகாா் அளிக்கலாம். வரதட்சிணை தொடா்பாக 181 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரமௌலி தெரிவித்தாா்.
இதில், மதுரை குழந்தைகள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பானுமதி, சாா்பு- ஆய்வாளா் மணிமாறன், கிராமநல அலுவலா் தேவி, செவிலியா் மணிமாலா, கிடாரிப்பட்டி ஊராட்சி செயலா் பாலமுருகன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.