மதுரை: மதுரையில் 358 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
மதுரை ரயில் நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் மூட்டைகளுடன் நின்றிருந்த 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
அதில், தெற்குமாசி வீதியைச் சோ்ந்த நான்சிங் (28), காமராஜபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் (34), கீழ்மதுரை ரயில் நிலைய சாலையைச் சோ்ந்த பென்டிக் செல்வம் (49) ஆகியோா் என்பதும், இவா்கள் மூவரும் 358 கிலோ குட்கா மற்றும் 1.550 கிலோ கிராம் கஞ்சா ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து காவல் சாா்பு - ஆய்வாளா் விஜயகுமாா் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ். காலனி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, குட்கா, கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.