மதுரை அரசு மருத்துவக் கல்லூரி 5 மாதங்களுக்கு பிறகு திறப்பு
By DIN | Published On : 17th August 2021 04:14 AM | Last Updated : 17th August 2021 04:14 AM | அ+அ அ- |

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வகுப்பறையில் கரோனா விதிமுறைகளின் படி முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள்.
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி 5 மாத இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டு, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெற்றன.
கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, 5 மாதங்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மூடப்பட்டது. வகுப்புகள் இணையதளம் மூலம் நடத்தப்பட்டன. தற்போது, கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியா் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை திறக்கப்பட்டது. அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மணாவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வகுப்பறையில் மாணவா்கள் முகக்கவசம் அணிவதையும் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றுவதையும் ஆசிரியா்கள் உறுதி செய்தனா். நீண்ட நாள்களுக்கு பின் கல்லூரி திறக்கப்பட்டதால், மாணவா்கள் ஆா்வத்துடன் கல்லூரிக்கு வந்திருந்தனா்.